சில நேரங்களில் சில மனிதர்களை இப்படித்தான் என்று வகைப்படுத்திவிட முடியாது. அந்த வகையில், எழுத்துலகின் கலகக்காரான் என்று எல்லோராலும் அறியப்படும் ஜே.கே. என்ற ஜெயகாந்தன், நினைவு தினமான இன்று அவரது வாழ்வைக் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
தன் சீரிய படைப்புகளால், சமூகத்தின் ஒழுங்குகளைக் கேள்வி கேட்டுகொண்டே இருந்த ஜெயகாந்தன் படித்தது என்னமோ ஐந்தாம் வகுப்புத்தான். தமிழ் எழுத்துலகில் பெரும் எழுத்தாளர்களும் சாதனையாளர்களும் பள்ளிப்படிப்பில் பெரிதாக வென்றவர்கள் கிடையாது. அம்பேத்கர் உட்பட. இந்த விதிக்கு ஜெயகாந்தனும் விதிவிலக்கல்ல. ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு எழுத்துக்குள் இறங்கிவிட்டார்.
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு மஞ்சக்குப்பம் கிராமத்தில் பிறந்தார். வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் ,மகாலெட்சுமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ஐந்தாம் வகுப்பிலேலய பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த ஜெயகாந்தன் சென்னைக்கு வந்தார்.
ஜனசக்தி அலுவலகத்தில் வேலை, பத்திரிகைகளை விற்பனை செவதில் செலவிட்டார். பின்னர் தஞ்சாவூரில் செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த இடைவேளை முதன்மையை அடைந்த ஜெயகாந்தன் தன் திறமையின் அடிதளமாக எழுத தொடங்கினார். அவரது படைப்புகளும் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் பாராட்டும் பெற்றார். பின்னர் திரை உலகதிற்கு வலம் வந்தார். அங்கையும் தன் பிரபலங்கள் பேசபட்டன.
அவரின் படைப்புக்கு கிடைத்த விருதுகள் சாகித்திய அகாதமி விருது, 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது என புகழ் விருதாக பேசப்பட்டன. தொடர்ந்து எழுத்துலகுக்கு ஏராளமான படைப்புகளைப் பங்களித்த பின்னர் உடல்நலக்குறைவால் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் காலமானார். இன்று ஜெயகாந்தனின் 6ஆவது நினைவு தினம்.
மொத்தத்தில், பெண்ணின் கற்பை பெண்னுறுப்போடு தொடர்பில் வைத்திருக்கும் காலம் வரையில், அக்கினிபிரவேசம் என்னும் காகித கலகம் வழியாக ஜெயகாந்தன் என்னும் சிந்தனையாளன் வாழ்வான் என்பதே ஜெயகாந்தனைக் குறித்த புரிதலில் அவசியமானது
Discussion about this post