கஜா புயலால் உயிரிழந்த கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் வழங்கினார்.
கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், நிதியுதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது. பட்டுக்கோட்டை, சாந்தாகாடு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், கோழி பண்ணை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு, தமிழக அரசு 10 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக வழங்கியது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர், இந்த தொகையை பார்த்திபனின் பெற்றோர் பெரியசாமி-வீரம்மாளிடம் வழங்கினார்.
Discussion about this post