மக்காச்சோளப் பயிரில் புழு தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலை அடிவாரமாக அமைந்துள்ள ஆத்தூர் பகுதியில் மானவாரி பயிராக சோளம், மக்காச்சோளம், மூக்கடலை உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்த நிலையில், கஜா புயலின் தாக்கத்தால் பயிர்கள் சேதமடைந்தது. இதில் மீண்டுவந்த பயிர்களை ஒரு விதமான புழு தாக்கியுள்ளது. ஏக்கருக்கு 40 மூடை கிடைத்த நிலையில், தற்பொழுது குறைந்த அளவே கிடைப்பதாக கூறும் விவசாயிகள், புழுக்களை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post