உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு ஒரு லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 8 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ரஷ்யாவில் 5 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 91 ஆயிரம் பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேரும், பெருவில் 2 லட்சத்து 29 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை, உலகம் முழுவதும் சுமார் 41 லட்சத்து 8 ஆயிரம் பேர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post