கொரோனா வைரசுக்கு இங்கிலாந்தில் 12 ஆயிரத்து 107 பேர் பலியாகி உள்ள நிலையில், உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 40ஆக உயர்ந்துள்ள சூழலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினில் 18 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ள சூழலில், பாதிப்பு எண்ணிக்கை 93 ஆயிரத்து 873 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா தொடர்ந்து கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. ஒரே நாளில் அங்கு 2 ஆயிரத்து 407 பேர் பலியான நிலையில், 26 ஆயிரத்து 945 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை, 6 லட்சத்து 13 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
Discussion about this post