உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று மட்டும் ஆயிரத்து 595 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 74 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பிரேஸிலில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேரும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளவில் ஒட்டுமொத்தமாக, 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 லட்சத்து 36 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
Discussion about this post