உலக அளவில் கொரோனா பாதிப்பால் 4024 பேர் உயிரிழப்பு!!!

கொரோனா வைரசால் உலக அளவில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 24 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.சீனாவில் 80 ஆயிரத்து 761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 ஆயிரத்து 109 பேர் குணமடைந்துள்ளனர்.  சிகிச்சை பலனின்றி 3 ஆயிரத்து 136 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தாலியில் 463 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகினர். பிரான்சில் 286 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவாக ஈரானில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் 750 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பால் 4024 பேர் உயிரிழப்பு

சீனாவில்  3,136 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இத்தாலியில் 463 பேர் கொரோனா பாதிப்பால் பலி

பிரான்சில் 286 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

ஈரானில் 7,000 பேர் கொரோனாவால் பாதிப்பு; இன்று ஒரேநாளில் 54 பேர் பலி

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

Exit mobile version