அண்டார்டிகாவில், ரோன் ஐஸ் ஷெல்ஃப் (ronne ice shelf) என்ற மிகப் பெரிய ஐஸ் பாறை உடைந்து, வெட்டல் (weddell) கடலில் மிதந்து வருகிறது.
4 ஆயிரத்து 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 175 கிலோ மீட்டர் நீளத்துடன் 25 கிலோ அகலமும் கொண்ட இந்த பனிப்பாறை, ஸ்பெயினின் மஜோர்கா (majorca) தீவுகளை விட பெரியது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் செயற்கைகோள் படங்களின் மூலம் இந்த பனிப்பாறை உடைப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A-76 என பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறை உடைப்பின் மூலம், கடல் நீர் மட்டம் உயரும் ஆபத்து ஏதுமில்லையென அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post