கொரோனா தொற்றை குணப்படுத்தும் உலகின் முதலாவது தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது. கொரோனாவால் இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் ரோமில் உள்ள தொற்றுநோய்க்கான ஸ்பாலன்சானி(spallanzani) மருத்துவமனையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா வைரசை அழிக்கும் உலகின் முதலாவது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஊசியை எலிகள் மூலம் சோதித்து பார்த்ததில் அவற்றின் உடலில் கொரோனா Antibody உற்பத்தியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை மனிதர்கள் உடலில் செலுத்தினால் கொரோனா வைரசை அழித்துவிடும் என்றும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post