இலங்கையில் உள்ள உலகத்தின் நுனி என்று அழைக்கப்படும் வேல்ட்ஸ் எண்ட் இடத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் ஹார்டன் சமவெளி தேசியப் பூங்காவில் உலகின் நுனி அல்லது பூமியின் முடிவு எனப் பொருள்படும் World’s End என்ற இடம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் காண்போரைக் கவரும் வகையில் கொள்ளை அழகுடன் காணப்படுகிறது.
கீழே என்ன உள்ளது என்பதே தெரியாத அளவிற்கு மேகக் கூட்டம் திரண்டிருக்கும் இவ்விடத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். உள்நாட்டுப் போர், அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது ஹார்டன் சமவெளிப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக
இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post