உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 7வது இடம்!

உலகின் மிகப் பழமையான நாடுகளின் பட்டியலானது நேற்று உலக மக்கள்தொகையின் ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நமது இந்தியா நாட்டிற்கு 7 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. ஈரான் நாடானது இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

உலக மக்கள்தொகை மைய ஆய்வறிக்கையின்படி, இந்தியா கி.மு.2000ஆம் ஆண்டில் முறைப்படியான அரசினைக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு பழமையான நாடுகள் வரிசையில் ஏழாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் கி.மு3200 ஆம் ஆண்டிலேயே அரசைக் கொண்டு விளங்கியதால் அந்நாட்டிற்கு இப்பட்டியலில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியலில் இடம் பிடித்த முதல் பத்து நாடுகளும் அவற்றில் அரசு உருவாகிய இடமும் கீழே தரப்பட்டுள்ளது.

1. ஈரான் – கி.மு 3200

2. எகிப்து – கி.மு 3100

3. வியட்நாம் – கி.மு 2879

4. ஆர்மீனியா – கி.மு 2492

5. வட கொரியா – கி.மு 2333

6. சீனா – கி.மு 2070

7. இந்தியா – கி.மு 2000

8. ஜார்ஜியா – கி.மு 1300

9. இஸ்ரேல் – கி.மு 1300

10. சூடான் – கி.மு1070

Exit mobile version