உலக அளவில் நேற்று அலை சறுக்கு தினத்தை ஒட்டி, நாடுமுழுவதும் ஏராளமானோர் கடற்கரைகளில் திரண்டனர்.
அலை சறுக்கு விளையாட்டு 2004 ஆம் ஆண்டு சர்பிரைடெர் என்ற அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது. தன் தலைக்கு மேல் வரும் அலைகளின் அடியில் பயணம் செய்வதும், அலையை சாலையாக்கி அதன் மீது சீறிப்பாய்வதும் தான், இந்த விளையாட்டின் சாராம்சம். அலைகளின் மீது செய்யும் சாதனையை பொறுத்து புள்ளிகளும் வெற்றியும் இப்போட்டியில் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் மங்களூர், மணிபால், மகாபலிபுரம், கோவலம், அந்தமான் தீவுகள் உட்பட ஏராளமான இடங்களில் நேற்று அலை சறுக்கு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான மக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.
Discussion about this post