கடந்த திங்களன்று நியூரம்பெர்க்கில் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு நடவடிக்கையில், இரண்டாம் உலகப்போர் கால வான்வழி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு காவல் துறையினர் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள சாலைகளை மூடி அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.கைப்பற்றப்பட்ட வெடிகுண்டில் ஓரளவு வெடித்திருக்கலாம் எனவும், மேலும் 100 கிலோ எடையில் தற்போது கைப்பற்றப்பட்டள்ளதாகவும் வெடிகுண்டு நிபுணர் மைக்கேல் வெயிஸ் கூறினார். மேலும் வெடிக்காத இந்த குண்டானது 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ஜெர்மனியில் சிதறடிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Discussion about this post