மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 396 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 989புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 131 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 571 புள்ளியாக வர்த்தகம் நிறைவடைந்தது. உலக பங்கு சந்தைகள் இன்று ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 77 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 366 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 623 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 289 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 22 ஆயிரத்து 48 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுற்றது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 41 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 929 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
Discussion about this post