அறந்தாங்கியில் ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காகிதப் பைகளை தயாரித்து மாணவிகள் சாதனை படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கோவில்வயல் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காகித பைகளை தயாரிக்கும் முயற்சி நடைபெற்றது. 807 மாணவிகள் மற்றும் 318 பெற்றோர்கள் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரத்து 410 காகித பைகளை தயாரித்து சாதனை படைத்தனர்.
இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த காகித பைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதியை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரின் குடும்பத்திற்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி சார்பில் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Discussion about this post