இன்று உலக மக்கள் தொகை தினம்! முதல் இடத்தில் இந்தியா..!!

மக்கள் தொகை பெருக்கம்:

இந்த உலகம் முழுவதும் மக்கள் தொகையால் நிரம்பிவிட்டால் நம் உலகம் என்னாகும் என்று யோசித்து பார்த்து உள்ளீர்களா? பெருகிவரும் மக்கள் தொகையால் என்ன என்ன பிரச்சனைகளை நாம் சந்திக்க உள்ளோம் என்பதை பற்றி என்றாவது சிந்தனை செய்ததுன்டா?  இவற்றையெல்லாம் நம் யோசித்து பார்க்க வேண்டும் என்பதற்காக தான் ஜூலை 11-ஆம் தேதி அன்று நாம் உலக மக்கள் தின நாளாக கொண்டாடி வருகிறோம்.  மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்து சொல்லும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை தினமும் அதன் வரலாறும்:

1987-ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் அன்று உலக மக்கள் தொகை 5 பில்லியனை கடந்து விட்டதை  நினைவு கூறும் வகையில் அந்த தினத்தை உலக மக்கள் தொகை தினமாக Dr. கே.சி. சக்கரியா கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து ஐ.நா. சபையால் 1989 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை தினமாக அறிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்துதான் சில நாடுகளில் மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது.   முதன் முறையாக 1990-ஆம் ஆண்டு 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது.  இந்த தினமானது பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சி, அனைவருக்கும் சமமான வாய்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலக மக்கள் தொகை  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த  உலக மக்கள் தொகை  தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நோக்கத்தோடு செயல்படும். அது நாட்டின் வளர்ச்சி குறித்தும் மற்றும் அதன் மேன்மை குறித்தும் கொண்டாடப்படும். அதுபோலவே இந்த ஆண்டும் சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டாடி வருகின்றனர். அந்த வழிமுறையானது பாலின சமத்துவம் மற்றும் உலக மக்கள் தொகையில் 49.7% பெண்களே அதிகம் உள்ளதால்  அவர்களுக்கான சமவாய்ப்பு என்றும் அவர்களுக்கான திறமைகளை வெளிபடுத்துதல் போன்றவற்றை அடிப்படையக்கொண்டு  இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. ஐநா கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையானது 1 பில்லியனை தொடுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. ஆனால் அதே சமயம்  200 வருடங்களுக்கு பிறகு மக்கள் தொகை வளர்ச்சியில் 7 பில்லியனை தொட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை 7 பில்லியனாகவும், 2021-ல் 7.9 பில்லியனாகவும் மக்கள் தொகையானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துக் கொண்டே போனது.

மக்கள் தொகையில் இந்தியா:

இந்த நிலை தொடர்ந்தால் 2030-ல் 8.5பில்லியனாகவும், 2050 களில் 9.7 பில்லியனாகவும் உயரலாம் என்று எதிபார்க்கப்படுகிறது.  தற்போது உள்ள தகவலின்படி நம் இந்தியாதான் மக்கள் தொகை பெருக்கத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது என்று ஐ.நாவின் தரவரிசைப்படி தெரிகிறது. இந்தியாவின் மக்கள் தொகையானது 2064-ஆம் ஆண்டு 1.7 பில்லியனை தொடலாம் என்று  ஐ.நா சபையின் கணக்கெடுப்பின்படி தெரிகிறது. மக்கள் தொகை ஒருபுறம் உயர அவர்களுக்கான உரிமையும், சமவாய்ப்பு, வேலையின்மை,வாழ்வாதார பின்னடைவு பொன்றவை இருந்து கொண்டே உள்ளது. இந்த பின்னடைவுகளை ஒழித்து அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை, சமவாய்ப்பு,சமூகநீதி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் சமமாக இருப்பதே உலக மக்கள்தொகையின் நோக்கம் ஆகும்.

 

 

 

 

 

Exit mobile version