சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு

2015 ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை காட்டிலும் தற்போது நடைபெறவுள்ள மாநாட்டில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.சி.சம்பத், மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், தற்போதய மாநாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டை விட, இந்த மாநாட்டில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version