2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் திருப்பூரில் தொழில் வளர்ச்சி ஏற்படும்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் திருப்பூரில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என அம்மாவட்ட தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால், பனியன் நகரான திருப்பூரில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என நம்புவதாக அப்பகுதி தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சொந்த மண்ணில் தொழில் தொடங்கும் வாய்ப்பை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்படுத்தியுள்ளதாகவும், தொழில் வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு துறைகள் வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தொழில் துறையினர் கூறுகின்றனர்.

Exit mobile version