அசாம் நிலப்பகுதியை ஆண்டவர்கள் அகோம் பேரரசு என்று அழைக்கப்படுவர். இவர்கள் அசாம் பகுதியினை 1586ஆம் ஆண்டு கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்கள். வடகிழக்குப் பகுதியினை ஆட்சி செய்த முதல் இந்து பேரரசு இவர்களே ஆகும். இந்தப் பேரரசினை நிறுவியவர் சயோ லங் சியூகாபா என்பவர் ஆவார். இவர் தாய்லாந்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இவர்கள் அசாமில் ஆட்சி செய்தபோது புதைமேடுகளை அமைத்துள்ளார்கள். இது CHARAIDEO MAIDAMAS என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இந்த புதைமேடுகள் எகிப்தின் பிரமிடுகளுக்கு ஒப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த புதைமேடுகள் மொத்தமாக 52 இடங்களில் அமைந்துள்ளன.
அகோம் பேரரசின் சிறந்த மன்னனாக போற்றப்படும் மாமன்னர் லச்சித் பர்பூக்கனின் 400ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அசாம் மாநில அரசினால் விமரிசையாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இவரது காலத்தில் மிகவும் பேசப்பட்ட போராக சாரைகாட் போரானது உள்ளது. சாரைகாட் கொளகாத்தியில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்றப் போரானது முகலாய ஆட்சியாளர்களுக்கும் அகோம் பேரரசிற்கும் இடையே நடந்த போராகும். முகலாயப் பேரரசு தனது பேரரசை அசாமிற்குள் விரிவுப்படுத்துவதற்காக போரிட்ட கடைசியான மிகவும் பெரிய போராக இது பார்க்கப்படுகிறது. காரணம் இது பிரம்மபுத்திரா நதியில் நடந்த ஒரு கடற்படைப் போர் ஆகும். இப்போரில் தனது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் கொரில்லாப் போர் முறையின் மூலமும் அகோம் படையினர் முகலாயப் படையினரை விரட்டி அடித்தனர். இந்தப் போருக்கு தலைமை தாங்கி முன் சென்றவர் மாமன்னர் லச்சித் பர்பூக்கன் ஆவார். இவர் அசாமின் இந்து மதத்தினரின் புனிதனராக போற்றப்பட்டு வருகிறார். இவரது 400வது பிறந்தநாள் விழாவில் பேசிய அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா முக்கிய உரை ஒன்றினை ஆற்றினார்.
அசாம் முதல்வரின் உரையில், ஐநாவின் யுனஸ்கோ அமைப்பானது, நமது மாநிலத்தின் சாரைகாட் புதைமேடுகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது என்ற செய்தியினை தெரிவித்தார். இந்த புதைமேடுகளில் அகோம் அரசர்கள் மற்றும் அரசிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆகவேதான் இதனை எகிப்தின் பிரமிடுகளுக்கு ஒப்பாக அனைவரும் கூறி வருகின்றனர். இந்த அகோம் அரசர்கள் தாய்லாந்தினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிற்காலத்தில் இந்து சமயத்தினைத் தழுவி, அச்சமயத்திற்காக தங்களின் வாழ்வினை அர்பணித்துள்ளனர்.