கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே 3ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது. கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் இந்தியா சரியான நேரத்தில் கடினமான முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த நடவடிக்கை கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் பூணம் கேத்ரபால்சிங் தெரிவித்துள்ளார். கடும் சவால்கள் இருந்தும், கொரோனாவை ஒழிப்பதற்கான போராட்டத்தில் இந்தியாவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்பது அவசியம் என்றும் பூணம் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post