லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் நியூசிலாந்து, வங்க தேசம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து வங்கதேசத்தை பேட் செய்ய பணித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்க தேசம் 49 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹாசன் 64 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 245 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூஸிலாந்து ராஸ் டெய்லரின் சிறப்பான ஆட்டத்தால் 47 புள்ளி 1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 82 ரன்கள் குவித்த ராஸ் டெய்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Discussion about this post