உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி, வங்கதேசம் வெற்றி பெற 322 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டவுன்டானில் நடக்கும் 23-வது லீக் ஆட்டத்தில் மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 23வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் நிதானமாக விளையாடினர். 3 ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
முதலில் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய எவின் லீவிஸ் 24.3 ஓவர்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 32.2 ஓவர்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன், ஆந்த்ரே ரசல், ஜாசன் ஹோல்டர், டேரன் பிராவோ ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அணியில் சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் அபாரமாக விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு, 322 ரன்களை வங்கதேசம் வெற்றி பெற இலக்காக நிர்ணயித்துள்ளது.
Discussion about this post