உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 33 வது ஆட்டத்தில் வலுவான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.
இன்று நடைபெறும் 33 போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவுடனான போட்டி மட்டும் மழையால் ரத்தான நிலையில், மற்ற 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணியின் ஒரு போட்டி மழையால் ரத்தான நிலையில், 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் நம்பிக்கையுடன் காணப்படும் நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும், அதேபோல், நியூசிலாந்து இப்போட்டியில் வெற்றி பெற்றால், முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பெர்மிங்காமில் நடக்கும் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
Discussion about this post