யோகா நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் தமிழ்நாடு கூட்டமைப்பு சார்பில் 100 மாணவ மாணவிகள் 100 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரி மேலாண் இயக்குநர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 4 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் சூரிய நமஸ்காரம் செய்தனர். சூரிய நமஸ்காரத்தில் உள்ள 12 நிலைகளை மொத்தம் 100 முறை 19.18 நிமிடத்தில் செய்து சாதனை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்த சாதனையானது நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டது.
Discussion about this post