மயிலாடுதுறையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த உறவினரை காவல்துரையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாந்துகாப்பு தெருவை சேர்ந்தவர் 38 வயதான சபரிராஜ். திருமணமாகாத இவர் சிமெண்டு சிலாப் அமைத்துக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவரும் இவருடைய உறவினர் மகன் சதீஷ் என்பவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் சதீஷும் சபரிராஜூம் ஒன்றாக மது அருந்த சிமெண்டு சிலாப் செய்யும் இடத்திற்கு வந்துள்ளனர்.அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சதீஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சபரிராஜ் தலையிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சபரிராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துரையினர் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Discussion about this post