டெல்லியில் மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்குகிறது.
மகளிருக்கான பத்தாவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் 72 நாடுகளில் இருந்து 300-க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஏற்கெனவே கடந்த 2006-ம் ஆண்டில் இதே போட்டியை நடத்திய இந்தியா, தற்போது 12 ஆண்டுகள் கழித்து 2-வது முறையாக மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது.
2006 சீசனில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
இப்போட்டியில் இந்தியா தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இந்தியாவின் சார்பில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் உள்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
Discussion about this post