பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இன்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, , வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
20 ஓவர் உலக கோப்பையை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 3 முறையும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளது. கடந்த மூன்று உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி லீக் சுற்றை தாண்டாத நிலையில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் ஆகியோரையே இந்திய அணி அதிகள் நம்பியுள்ளது.
புரோவிடென்சில் நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவாருக்கு இது முதல் போட்டித் தொடராகும். முதல் முறையாக பெண்கள் கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post