திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் செங்கல் சூளைகளில் பணியாற்றி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
எந்த விதத்திலும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கீழ்பென்னாத்தூரில் உள்ள செங்கல் சூளைகளில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு செங்கல் சூளைக்கு பணிக்கு வருவதாக அந்தப் பெண்கள் கூறுகின்றனர். இவ்வாறு வேலை செய்வதன் மூலம் மூலம் தங்களது குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post