பாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வருவதற்கு வாய்ப்பே இல்லை, என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பாரதி தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற பாரதி விழாவில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தன்னை போன்ற பெண்கள் மேடைகளில் நின்று பேசுவதற்கு காரணம் பாரதி தான், என்று கூறினார். பாரதியின் புகழை சில மணிநேரத்தில் சொல்லிவிட முடியாது என்று கூறிய அவர், அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாடலை பெண்கள் மனதில் பதிந்தாலே போதும் என்று கூறினார். தொடர்ந்து, பாரதியின் சிறப்புகள் பற்றி பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
Discussion about this post