தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவு வாக்களித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 72 புள்ளி 81 சதவிகித வாக்குகள் பதிவானதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களை சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
அதன் படி, மொத்தமுள்ள 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 ஆண் வாக்காளர்களில், 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மொத்தமுள்ள 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 112 பெண் வாக்காளர்களில், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேரும் வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 192 பேரில் ஆயிரத்து 419 பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 580 பேர் கூடுதலாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post