அமெரிக்காவில் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க பெண் ஒருவர் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் எமிலி தளர்மோ என்பவர், ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு இன நாயை ஜாக்சன் என பெயரிட்டு 5 வருங்களாக வளர்த்து வந்துள்ளார்.கடந்த வாரம் அந்த நாயுடன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நாய் திடீரென மாயமானது, பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் எமிலி வருத்தமடைந்துள்ளார்.
இதனையடுத்து ஜாக்சன் போட்டோவை விமான பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோரிடம் கொடுத்து விசாரித்துள்ளார்.அப்படி இருந்தும் நாயை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் ஒரு விமானத்தை ரூ.85,000 வாடகைக்கு எடுத்து சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஒக்லாந்து பகுதிகளில் தேடியுள்ளார். அப்படியும் கிடைக்காத நிலையில் தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 7,000 டாலர் அதாவது சுமார் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Discussion about this post