மீ டூ வை பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும், சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சத்தித்த அவர், மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேல் சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வெளிநாடு அழைத்து செல்ல இருப்பதாகவும், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீ டூ தற்போது பிரபலமாக வளம் வந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பெண்கள் ஆக்கப்பூர்வமாக அதை பயன்படுத்த வேண்டும் என்றும், சர்ச்சைகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக இருப்பதாகவும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post