ஒடிசாவில் தொலைபேசி வழியாக முத்தலாக் கூறிய கணவர் மீது, மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்த காமில் என்பவர், 11 ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 5வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த காமில், தொலைபேசியில் மனைவியை தொடர்பு கொண்டு முத்தலாக் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அவரின் மனைவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கமில் மீது முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post