டி20 உலககோப்பை : பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

உலககோப்பை டி20 போட்டியானது மகளிருக்கு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் நடைபெற்றது. இந்த லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன.  நேற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணியினர் 4 விக்கெட் இழப்பிற்கு  149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பாகிஸ்தான் கேப்டன் மரூஃப் 68 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆயிஷா நசீம் கேப்டனுடன் சேர்ந்து நின்று அதிரடி காட்டி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியது. வெறும் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. யாஸ்திகா 17, ஷபாலி வர்மா 33, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 16 ரன்களில் வேளியேற 4-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் ரிச்சா கோஷ் முறையே 53 ரன்கள் மற்றும் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

Exit mobile version