மது குடித்துவிட்டு, தினமும் துன்புறுத்தி வந்த கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரபாக்கம் அருகே ஆணை குன்றம் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தினமும் குடித்து விட்டு, மனைவி மலரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக துன்பப்பட்டு வந்த நிலையில், மது அருந்தி மயங்கிய நிலையில் இருந்த கன்னியப்பன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி மலர் தீ வைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர் கன்னியப்பனை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் மலர் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post