தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தீகுண்டு பகுதியில் கடந்த மாதம் 28.7.2019 அன்று எரிந்த நிலையில் ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இவ்விசாரணையில் இறந்த பெண் கௌரம்மா(40) கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே நேனமங்கலா பகுதியைச் சார்ந்தவர் என்றும் கண்டறிந்தனர்.
விசாரணையில் அவரது கணவர் லோகேஷ்(45) குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 20வருடங்களுக்கு முன்பு கௌரம்மாவை நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கௌரம்மாவிற்கு ஜீவனாம்ச தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை சில ஆண்டுகளாக ஜீவனாம்சம் கொடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் தான் நிலத்தை விற்று முழு தொகையும் செட்டில் செய்வதாக கூறி தனிமையான இடத்திற்கு கெளரம்மா அழைத்து தலையில் பலமாக தாக்கி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு காரிமங்கலம் தீகுண்டு பகுதியில் வீசியுள்ளார்.இவர்கள் காரில் வந்து சடலத்தை வீசிவிட்டு தீ வைப்பது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை தொடர்ந்து காரிமங்கலம் போலீஸார் லோகேஷ் மற்றும் அவரது நண்பர் அனுமந்தப்பா கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்
Discussion about this post