விருதுநகரில் பெண்ணை கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்ற வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் குற்றவாளிக்கு
ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கடந்த 2012 ஆண்டு தனது தோட்டத்திற்கு வேலை செய்ய சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் முத்துலட்சுமியை பின்தொடர்ந்து சென்று, அவரது கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்து பின்பு நகையை பறித்து விட்டு தப்பியோடியுள்ளார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கருப்பசாமிக்கு ஆயுள்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து கருப்பசாமி சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post