பெரம்பலூர் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் தங்கையை விஷம் வைத்துக் கொன்ற பெண், அவரது மகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.அய்யலூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டியான ராணி, தமது இளைய மகள் ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த 19ம் தேதியன்று நீண்ட நேரமாகியும் ராணி வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது, ராஜேஸ்வரி உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உயிருக்கு போராடிய ராணியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ராணியும் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராணியின் மூத்த மகளான வள்ளியிடம் மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தாய் ராணியிடம் கடனை அடைப்பதற்காக சொத்தை விற்று தர கேட்டதாகவும், அதற்கு ராணியும், தங்கை ராஜேஸ்வரியும் மறுப்பு தெரிவித்ததால், தன் மகன் வினோத் குமாருடன் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ராஜேஸ்வரியும், அவரது மகன் வினோத் குமாரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post