தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே நேர்ந்த சாலைவிபத்தில் தந்தை, தாய் இருவரும் உயிரிழந்த நிலையில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் மாரியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன், அவர் மனைவி வீரலட்சுமி, இவர்களின் ஒருவயது மகன் காளீஸ்வர பாண்டியன் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சின்னமனூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வீரபாண்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது இவர்களின் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேல்முருகன் நிகழ்விடத்திலேயே உடல் நைந்து உயிரிழந்தார். படுகாயமடைந்த வீரலட்சுமியையும், ஒரு வயதுக் குழந்தை காளீஸ்வர பாண்டியனையும் காவல்துறையினர் மீட்டுத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி வீரலட்சுமி உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த ஒரு வயது குழந்தை காளீஸ்வர பாண்டியனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post