சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
ஹர்பின் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சோதனை மூலம் மருத்துவர்கள் உறுதி செய்தனர். தாயிலிருந்து குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தை வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லாது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post