விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இதையடுத்து, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்து மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் ஆர்பிட்டர் உதவியுடன் கண்டறியப்பட்டாலும், விக்ரம் லேண்டரின் சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதே சமயம், ஆர்பிட்டர் மூலம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்பதாகவும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
Discussion about this post