மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாலாமாக்ஸ் பகுதியில் உள்ள அந்த எரிமலை போபோகேட்பெடல் என அழைக்கப்படுகிறது. சுமார் 17 ஆயிரம் அடி உயரம் கொண்ட அந்த எரிமலை மெக்சிகோவின் இரண்டாவது மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுகிறது. அந்த எரிமலை வெடித்து சிதறியதில் வானத்திலிருந்து 3 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு சாம்பல், நெருப்பு குழம்பு, பாறைகள் தூக்கி வீசப்பட்டன. இந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Discussion about this post