காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடி செய்த வழக்கில், சரிதா நாயர் உட்பட 3 பேரின் தண்டனையை வரும் 14ந் தேதி வரை நிறுத்தி வைத்து நீதிபதி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி கோவையில் 26 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக சரிதா நாயர், அவர் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி கண்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. சரிதா நாயருக்கும், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், 3 பேரின் தண்டனை வரும் 14ந் தேதி வரை நிறுத்தி வைத்து நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.
Discussion about this post