அடிபணிந்து செல்வதை விட உயிரை இழக்கவும் தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க காவல்துறை தலைவரை கைது செய்ய முயன்ற சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சிபிஐ மூலம் மாநிலத்தின் தன்னாட்சியை மத்திய அரசு நசுக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மமதாவின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சமரசமாக செல்வதை விட உயிரை இழக்கவும் தயாராக இருப்பதாக மமதா தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி நிர்வாகிகளை வஞ்சித்தபோது கூட வீதிக்கு வந்து போராடியதில்லை என்று குறிப்பிட்ட அவர், காவல்துறை தலைவரை குறிவைத்துள்ளது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post