கொடைக்கானலில் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் அளவு மற்றும் விலை இரண்டு விதமாக அச்சிடப்பட்டிருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் குழப்பமடைந்தனர். தயிர் பாக்கெட்டின் முன் பகுதியில் 200 எம்.எல். 10 ரூபாய் என்றும், பக்கவாட்டு பகுதியில் 450 எம்.எல் 35 ரூபாய் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து ஆவின் பாலகத்தில் உள்ள பணியாளர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post