2020ம் ஆண்டின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் கடந்த ஆண்டில் பெரிதும் வீழ்ச்சியடைந்த ஆட்டோமொபைல் துறைக்கு வாழ்வளிக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியினால் கடந்த பலர் வேலை இழந்தனர். பல நிறுவனங்கள் மூடப்பட்டன. போதாகுறைக்கு வாகன விற்பனையின் வீழ்ச்சி காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் பிஎஸ்6 வாகனங்கள் அமலுக்கு வர உள்ளது. எனவே ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பிஎஸ் 4 வாகனங்களை சலுகை விலையில் விற்றாலும் மக்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் ஆட்டோமொபைல் துறையே விழிபிதுங்கி நிற்கிறது.
இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் நிச்சயம் தங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் என அத்துறையினர் நம்பியுள்ளனர்.
மேலும் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாக 15 வருடங்களுக்கு மேல் உள்ள வாகனங்களை உபயோகிக்க கூடாது என்ற திட்டத்தை அமல்படுத்தினால் நிச்சயம் வாகன விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் வித்தியம் பேட்டரிக்கு விதிக்கப்பட்டுள்ள 5% இறக்குமதி வரியை நீக்கினால் அதன் விலை குறைந்து விற்பனை உயர வாய்ப்புள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை தவணை முறையில் வாங்கும் போது கட்டப்படும் வரிக்கு சலுகை அளிக்க வேண்டும் என வாகனதுறையினர் எதிர்பார்க்கின்றனர்.
Discussion about this post