தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இன்னும் சில தினங்களில் பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இது அண்டை மாநிலங்களுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரபிக்கடலில் உருவான வாயு புயல் ஈரப்பதத்தை இழுத்துவிட்டதால் தெலங்கானா, ஆந்திராவில் பருவ மழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தெலங்கானாவில் கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த 12 ஆம் தேதி துவங்க வேண்டிய பருவமழை இன்னும் சில தினங்கள் கழித்து தான் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடலோர ஆந்திரா, சத்தீஷ்கர் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Discussion about this post