தோல், ஜவுளி மற்றும் கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிக்கு, ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக ஏற்றுமதியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக மத்திய தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். உரிய நேரத்தில், வங்கிக் கடன் கிடைக்காததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். விவசாயத்தை போல, ஏற்றுமதியையும், முன்னுரிமை கடன் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, ஏற்றுமதியாளர்களுக்கு ‘இ-வாலட்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும் என்றும், ஏற்றுமதி செலவை குறைக்க, விரைவில் நாடாளுமன்றத்தில், பன்முக சரக்கு போக்குவரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post