உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் வெற்றி பெறுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியின் எம்.பி ஆக உள்ளார். இந்த தொகுதியில் கடந்த 1999 ம் ஆண்டு சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து வந்த 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் ராகுல் காந்தி தொடர்ச்சியாக போட்டியிட்டு வென்ற தொகுதி இது. கடந்த 2014 தேர்தலில் ராகுல் காந்தி 46 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி 34 சதவீத ஓட்டுகளை பெற்றார். ஆனால் ராகுல் 2009 ல் பெற்ற ஓட்டுகளை காட்டிலும் 2014ல் 25 சதவீத ஓட்டுகளை குறைவாக பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை ராகுல், அமேதி தொகுதி மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதால் அமேதியில் அவரது வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். வயநாட்டில் அவர் வெற்றி பெற்றாலும் அமேதியில் அவர் கடுமையான போட்டியினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்
Discussion about this post