பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி யூட்யூபில் ஒளிபரப்பு செய்து வந்தவர் மதன். தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டு வந்த மதன்மீது சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் கிளம்பியது.குறிப்பாக மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீஸாரிடம் இரண்டு புகார்கள் வந்தது.இதனையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் மதனை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் மதன் நேரில் ஆஜர் ஆகாததால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக மதன் விபிஎன் சர்வரை பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பதால் போலீசார் மதனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பப்ஜி மதன் மீது மேலும் ஒரு புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினருக்கு வந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு சைபர் சைபர் கிரைம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து மதனை தீவிரமாக தேடி வந்தனர்.மதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொடர்ந்து தலைமுறைவாக இருப்பதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் பப்ஜி மதன் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான ஆன்லைன் புகார்கள் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழக காவல்துறைக்கு இது வரை 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பப்ஜி மதன் மீது தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post